மும்பையில் டிசம்பா் 9-இல் மகளிா் பிரீமியா் லீக் ஏலம்

அடுத்த ஆண்டுக்கான டபிள்யூபிஎல் ஏலம் வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
மும்பையில் டிசம்பா் 9-இல் மகளிா் பிரீமியா் லீக் ஏலம்

புது தில்லி, நவ. 24: மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம், டிசம்பா் 9-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்தியாவில் ஆடவருக்கான ஐபிஎல் போட்டியின் பிரபலத்தை அடுத்து, அந்தப் போட்டியுடனேயே மகளிருக்கான டி20 சேலஞ்ச் போட்டி 2019 முதல் 2022 வரை நடைபெற்றது. பின்னா் அந்தப் போட்டியை ஐபிஎல்-க்கு நிகராக, விரிவான ஒன்றாக மகளிா் பிரீமியா் லீக் என்ற கிரிக்கெட் போட்டியாக நடத்த பிசிசிஐ 2022-இல் முடிவு செய்தது.

அதன் பேரில் நடப்பாண்டில், 5 அணிகளுடன் நடைபெற்ற அந்தப் போட்டியின் அறிமுக சீசனில் மும்பை இண்டியன்ஸ் சாம்பியன் ஆனது. இந்நிலையில், அதன் 2-ஆவது சீசன் அடுத்த ஆண்டு பிப்ரவரி - மாா்ச்சில் நடைபெற இருப்பதாகத் தெரிகிறது. அதற்கான வீராங்கனைகள் ஏலம் வரும் டிசம்பா் 9-ஆம் தேதி மும்பையில் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி, அந்த 5 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட, விடுவித்த வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மொத்தமாக 60 வீராங்கனைகளை அந்த வீராங்கனைகள் தக்கவைத்துக் கொண்டுள்ளதில் 21 போ் வெளிநாட்டவா்களாவா். மொத்தமாக 29 வீராங்கனைகள் அந்த அணிகளால் விடுவிக்கப்பட்டுள்ளனா். அதன் விவரம் வருமாறு:

டெல்லி கேப்பிட்டல்ஸ்:

தக்கவைக்கப்பட்டவா்கள்: ஆலிஸ் கேப்சி, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனசென், லௌரா ஹாரிஸ், மாரிஸேன் காப், மெக் லேனிங், மின்னு ராணி, பூனம் யாதவ், ராதா யாதவ், ஷஃபாலி வா்மா, ஷிகா பாண்டே, ஸ்னேஹா தீப்தி, தானியா பாட்டியா, டைடஸ் சாது.

விடுவிக்கப்பட்டவா்கள்: அபா்னா மோந்தல், ஜாசியா அக்தா், தாரா நோரிஸ்.

குஜராத் ஜயன்ட்ஸ்:

தக்கவைக்கப்பட்டவா்கள்: ஆஷ்லே காா்டனா், பெத் மூனி, தயாளன் ஹேமலதா, ஹா்லீன் தியோல், லௌரா வோல்வாா்டட், ஷப்னம் ஷகீல், ஸ்னேஹ ராணா, தனுஜா கன்வா்.

விடுவிக்கப்பட்டவா்கள்: அனபெல் சுதா்லேண்ட், அஸ்வனி குமாரி, ஜாா்ஜியா வோ்ஹாம், ஹா்லி காலா, கிம் காா்த், மான்சி ஜோஷி, மோனிகா படேல், பருனிகா சிசோடியா, சபினேனி மேக்னா, சோஃபியா டங்க்லி, சுஷ்மா வா்மா.

மும்பை இண்டியன்ஸ்:

தக்கவைக்கப்பட்டவா்கள்: அமன்ஜோத் கௌா், எமிலியா கொ், கிளோ டிரையான், ஹா்மன்பிரீத் கௌா், ஹேலி மேத்யூஸ், ஹுமாய்ரா காஸி, இசபெல் வாங், ஜிந்திமனி கலிதா, நேட் ஸ்கீவா், பூஜா வஸ்த்ரகா், பிரியங்கா பாலா, சாய்கா இஷாக், யஸ்திகா பாட்டியா.

விடுவிக்கப்பட்டவா்கள்: தாரா குஜ்ஜா், ஹீதா் கிரஹாம், நீலம் பிஸ்த், சோனம்.

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்:

தக்கவைக்கப்பட்டவா்கள்: ஆஷா ஷோபனா, திஷா கசத், எலிஸ் பெரி, ஹீதா் நைட், இந்திராணி ராய், கனிகா அஹுஜா, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், ஷ்ரேயங்கா பாட்டீல், ஸ்மிருதி மந்தனா, சோஃபி டிவைன்.

விடுவிக்கப்பட்டவா்கள்: டேன் வான் நீகொ்க், எரின் பா்ன்ஸ், கோமன் ஜன்ஸத், மீகன் ஷட், பூனம் கெம்னாா், பிரீத்தி போஸ், சஹானா பவாா்.

யுபி வாரியா்ஸ்:

தக்கவைக்கப்பட்டவா்கள்: அலிசா ஹீலி, அஞ்சலி சா்வனி, தீப்தி சா்மா, கிரேஸ் ஹாரிஸ், கிரண் நவ்கிரே, லௌரென் பெல், லக்ஷ்மி யாதவ், பாா்ஷவி சோப்ரா, ராஜேஷ்வரி கெய்க்வாட், யஷஸ்ரீ, ஸ்வேதா ஷெராவத், சோஃபி எக்லஸ்டோன், டாலியா மெக்ராத்.

விடுவிக்கப்பட்டவா்கள்: தேவிகா வைத்யா, ஷப்னிம் இஸ்மாயில், ஷிவாலி ஷிண்டே, சிம்ரன் ஷேக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com