
ஆசிய விளையாட்டில் கோல்ஃப் போட்டியில் தனி நபர் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் கோல்ஃப் விளையாட்டில் இந்திய மகளிர் முதல் முறையாக ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர்.
சீனாவின் ஹாங்ஷெள நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், இன்று நடைபெற்ற கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் களம் கண்டார். 7 ஸ்ட்ரோக் முன்னிலையில் இந்த நாளைத் தொடங்கினார். எனினும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அர்பிசயா யூபோல் தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். இதன்மூலம் அதிதி அசோக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






