அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி-நவீன் உல் ஹக்!

ஐபிஎல் போட்டிகளில் மோதிக்கொண்ட விராட் கோலியும் நவீன்-உல்-ஹக்கும் இந்த உலகக் கோப்பையில் சமரசத்தில் ஈடுபட்டது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :11 அக்டோபர் 2023, 5:40 pm

DIN

ஐபிஎல் போட்டியில் மே 1ஆம் தேதி நடந்த போட்டியின்போது விராட் கோலிக்கும் ஆப்கனை சேர்ந்த நவீன் உல் ஹக்கிற்கும் மோதல் ஏற்பட்டது. இந்த வார்த்தைப் போர் ஐபிஎல் முழுவதும் நீடித்து வந்தன. இதனால் உலகக் கோப்பையில் இவர்களது ஆட்டம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

விராட் கோலி பேட்டிங் ஆட களமிறங்கியதும் நவீன் உல் ஹக் பந்து வீச வந்தார். ஏதோ நடக்கப்போகிறதென ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், நடந்ததோ வேறு. நவீன் உல் ஹக்கை ரசிகர்கள் கிண்டல் செய்யும்போது கோலி அவ்வாறு செய்ய வேண்டாம் என ரசிகர்களை நோக்கி சைகை செய்தார். 

Story image

பின்னர் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இருவரும் கைகள் குழுக்கி ஒருவரை ஒருவர் சமாதனம் செய்துக்கொண்டனர். 

Story image

இது குறித்து நவீன் உல் ஹக், “விராட் கோலி சிறந்த வீரர். நாங்கள் கைகள் குழுக்கிக் கொண்டு இந்தப் பிர்சனையில் இருந்து முன்னகர்ந்து விட்டோம். மைதானத்துக்குள் நடந்தது அத்துடனே முடிந்து விட்டது. மைதானத்துக்கு வெளியே எதுவுமில்லை. விராட் கோலி ‘இதை முடித்துக்கொள்வோம்’ எனக் கூறினார். நானும் அதையே கூறினேன்” என நெகிழ்ச்சியாகப் பேசினார். 

Story image

முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.