ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் 303 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளதை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
மேலும், போட்டியில் பங்கேற்கவுள்ள 303 வீரர், வீராங்கனைகளுடன் 143 பயிற்சியாளர்களையும் மத்திய அரசு அனுப்பவுள்ளது.
ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 22ஆம் தேதி சீனாவில் தொடங்கவுள்ளது. அக்டோபர் 28ஆம் தேதி வரை போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதில், இந்தியாவிலிருந்து பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் பட்டியலை மத்திய விளையாட்டுத் துறை இன்று (அக். 17) வெளியிட்டுள்ளது. 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என 303 பேர் பங்கேற்பார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் 17 விதமான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். வீரர் - வீராங்கனைகளுடன் 143 பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
கடந்தமுறை நடைபெற்ற போட்டியில், 13 போட்டிகளில் பங்கேற்க 190 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

பளுகல் அருகே தொழிலாளி மா்ம மரணம்

குமரி மாவட்டத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சா் ராஜேஷ்குமாா்

கஞ்சா, போதை சாக்லெட் பதுக்கல்: இளைஞா் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



