நெதர்லாந்தை வீழ்த்தி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை!
இந்த உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.


இந்த உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
உலகக் கோப்பையில் லக்னௌவில் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நெதர்லாந்து 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சைபிராண்ட் எங்கல்பிரட் 70 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் தில்ஷன் மதுஷங்கா மற்றும் ரஜிதா தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மஹீசா தீக்ஷனா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் குசால் பெரேரா களமிறங்கினர். குசல் பெரேரா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, பதும் நிசங்கா மற்றும் சதீரா சமரவிக்கிரம ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சீராக ரன்களை குவித்தது. பதும் நிசங்கா அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 52 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அதன்பின் களமிறங்கியவர்களில் சரித் அசலங்கா 44 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சதீரா சமரவிக்கிரம 91 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.
இறுதியில் 48.2 ஓவர்களில் இலக்கை எட்டிய இலங்கை நெதர்லாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு இலங்கை முற்றுப்புள்ளி வைத்து தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...