அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது.

News image
Updated On :26 அக்டோபர் 2023, 1:58 pm

DIN

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையில் பெங்களூரு  சின்னசுவாமி மைதானத்தில் இன்றையப் போட்டியில் இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43  ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் லகிரு குமாரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரஜிதா  மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். பெரேரா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் குசல் மெண்டிஸ் 11  ரன்களில் ஆட்டமிழக்க பதும் நிசங்கா  மற்றும் சதீரா சமரவிக்கிரம ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி இலங்கை அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பதும் நிசங்கா 77 ரன்களுடனும் (7 பவுண்டரிகள் , 2 சிக்ஸர்கள்), சதீரா சமரவிக்கிரம 65 ரன்களுடனும் (7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) களத்தில் இருந்தனர்.

இதன்மூலம், 25.4 ஓவர்களில் இலக்கை எட்டி  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றது. 

இந்த உலகக் கோப்பைத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணிக்கு கிடைக்கும் 2-வது வெற்றி இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.