உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்து 2-வது இடத்துக்கு முன்னேறிய டேவிட் வார்னர்!
உலகக் கோப்பையில் அதிக சதமடித்தவர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இரண்டாவது இடத்த்துக்கு முன்னேறியுள்ளார்.


உலகக் கோப்பையில் அதிக சதமடித்தவர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இரண்டாவது இடத்த்துக்கு முன்னேறியுள்ளார்.
உலகக் கோப்பையில் நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் உலகக் கோப்பையில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அவர் 40 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
அதேபோல தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னரும் சதம் விளாசி அசத்தினார். அவர் 93 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உலகக் கோப்பையில் டேவிட் வார்னர் அடிக்கும் 6-வது சதம் இதுவாகும். இதன்மூலம், உலகக் கோப்பையில் 6 சதங்கள் அடித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து உலகக் கோப்பையில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார்.
இந்தப் பட்டியலில் 7 சதங்களுடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...