தனி ஒருவனாக சதம் விளாசி போராடிய டெம்பா பவுமா: ஆஸ்திரேலியாவுக்கு 223 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தனி ஒருவனாக சதம் விளாசி போராடிய டெம்பா பவுமா: ஆஸ்திரேலியாவுக்கு 223 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ஒருநாள் தொடர் தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

இதனையடுத்து, தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா களமிறங்கினர். டி காக் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, களமிறங்கியவர்களில் வாண்டர் துசன் (8 ரன்கள்), மார்கரம் (19 ரன்கள்), ஹென்ரிச் க்ளாசென் (14 ரன்கள்), டேவிட் மில்லர் (0 ரன்), மேக்ரோ ஜான்சன் (32 ரன்கள்), கேசவ் மகாராஜ் (2 ரன்கள்) எடுத்து தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினர். விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டெம்பா பவுமா தொடக்கம் முதலே ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய அவர் சதம் விளாசி அசத்தினார். தென்னாப்பிரிக்க அணி 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 114 ரன்களுடன் டெம்பா பவுமா கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 14  பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜோஸ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்கஸ் ஸ்டொய்னிஸ்  2  விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சீன் அபாட், அஹர், ஆடம் ஸாம்பா மற்றும் கேமரூன் கிரீன்  தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்ற்றினர்.

223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com