மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

த்ரீ எக்ஸ் த்ரீ தேசிய கூடைப்பந்து: சென்னையில் இன்று தொடக்கம்

த்ரீ எக்ஸ் த்ரீ எனப்படும் கூடைப்பந்து தேசிய சீனியா் போட்டிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்22) முதல் 24- ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவா் ஆதவ் அா்ஜுனா

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 7:48 pm

DIN

த்ரீ எக்ஸ் த்ரீ எனப்படும் கூடைப்பந்து தேசிய சீனியா் போட்டிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்22) முதல் 24- ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியில் அணிக்கு 3 வீரா்கள் இடம்பெறுவா். கூடைப்பந்து விளையாட்டின் அரை மைதானத்தில் விளையாடப்படும் இப்போட்டியில் ரயில்வே அணி உட்பட 30 மாநில ஆடவா் அணிகளும், 25 மாநில பெண்கள் அணியினரும் பங்கேற்பா்.

இந்த போட்டிகளில் முதல் 7 இடங்கள் பிடிக்கும் அணிகள் வரும் அக்டோபா் 23 ஆம் தேதி கோவாவில் நடைபெறும் 37 -ஆவது தேசிய போட்டிகளில் (நேஷனல் கேம்ஸ்) பங்கேற்க உள்ளனா்.

மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.3 லட்சமும் , இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2 லட்சமும், மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.