விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

உலகக் கோப்பை: சென்னை போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளத்தில் இன்று தொடங்கவுள்ளது.

News image

படம்: டிவிட்டர் | ஐசிசி

Updated On :31 ஆகஸ்ட் 2023, 8:25 am IST

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளத்தில் இன்று தொடங்கவுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறவுள்ளது.

இதுவரை பிற நாடுகளுடன் இணைந்து உலகக் கோப்பை போட்டியை நடத்திவந்த இந்தியா, முதல்முறையாக தனியாக நடத்துகின்றது.

குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டிகளை காண்பதற்கான டிக்கெட் ‘புக் மை ஷோ’ செயலியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஏற்கெனவே முதல் இரண்டு நாள்கள் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8-ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு புக் மை ஷோவில் தொடங்கிறது.

ஏற்கெனவே, மாஸ்டர் கார்டு பயனாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் நேற்றைய முன்தினமே விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 14-ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.