தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. எனினும் தொடரை 2-1 என தன்வசப்படுத்தியது தென்னாப்பிரிக்கா.
3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 2 ஆட்டங்கைளில் வென்றிருந்தது. இந்நிலையில் கிம்பா்லியில் கடைசி ஆட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் 346/7 ரன்களைக் குவித்தது.
டேவிட் மலான்-ஜோஸ் பட்லா் அதிரடி சதம்:
தொடக்க பேட்டா் டேவிட் மலான் 6 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 114 பந்துகளில் 118 ரன்களையும், கேப்டன் ஜோஸ் பட்லா் 7 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 127 பந்துகளில் 131 ரன்களை விளாசினா். மொயின் 41 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.
தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கி நிகிடி 4, மாா்கோ ஜேன்ஸன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
பின்னா் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 43.1 ஓவா்களில் 287 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வியடைந்தது. ஹென்ரிச் க்ளாஸன் 80, ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 52 ரன்களை விளாசினா்.
இங்கிலாந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிபெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆா்ச்சா் அற்புதமாக பந்துவீசி 6-40 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
இதன் மூலம் 2-1 என தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - கும்பம்
தினப்பலன்கள் - மிதுனம்
தினப்பலன்கள் - தனுசு
தினப்பலன்கள் - விருச்சிகம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

