ஆஸ்திரேலியா 6-ஆவது முறையாக சாம்பியன் 

8-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. 
ஆஸ்திரேலியா 6-ஆவது முறையாக சாம்பியன் 

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 8-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. 

இது டி20 உலகக் கோப்பையில் அந்த அணிக்குக் கிடைத்த 6-ஆவது சாம்பியன் பட்டமாகும். கடந்த 2018, 2020-ஆம் ஆண்டு போட்டிகளில் வாகை சூடிய ஆஸ்திரேலியா, தொடர்ந்து 3-ஆவது முறையாக (ஹாட்ரிக்) தற்போதும் கோப்பை வென்றிருக்கிறது. அந்த அணி இவ்வாறு "ஹாட்ரிக்' கோப்பை வெல்வது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன் 2010, 2012, 2014 ஆகிய ஆண்டுகளிலும் அந்த அணி தொடர்ந்து சாம்பியனானது குறிப்பிடத்தக்கது. 

மறுபுறம், சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் மூலம், வரலாற்றிலேயே முதல் முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்த தென்னாப்பிரிக்கா போராடி தோல்வியைத் தழுவியது. அந்த அணி பெüலிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு சவால் அளித்ததுடன், பேட்டிங்கிலும் முனைப்பு காட்டியது. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தரப்பில் அலிசா ஹீலி 3 பவுண்டரிகளுடன் 18, ஆஷ்லே கார்டனர் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கிரேஸ் ஹாரிஸ் 10, கேப்டன் மெக் லேனிங் 10, எலிஸ் பெரி 7, ஜார்ஜியா வேர்ஹாம் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். 

ஓவர்கள் முடிவில், அதிகபட்சமாக பெத் மூனி 9 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 74, டாலியா மெக்ராத் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென்னாப்பிரிக்க பெüலிங்கில் ஷப்னிம் இஸ்மாயில், மாரிúஸன் காப் ஆகியோர் தலா 2, நோன்குலுலேகோ லாபா, கிளோ டிரயான் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். 

பின்னர் தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் லெüரா வோல்வார்டட் நல்லதொரு இன்னிங்ûஸ ஆடி 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 61 ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்தார். அவருக்குத் தகுந்த பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த கிளோ டிரையானும் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார். 
இந்த ஜோடி வீழ்ந்ததும் தென்னாப்பிரிக்காவின் தோல்வி தவிர்க்க முடியாமல் போனது. இதர பேட்டர்களில் தஸ்மின் பிரிட்ஸ் 10, மாரிúஸன் காப் 11, கேப்டன் சுனே லஸ் 2, அனிகே போஷ் 1 ரன்னுக்கு நடையைக் கட்டினர். ஓவர்கள் முடிவில் நாடின் டி கிளெர்க் 8, சினாலோ ஜாஃப்தா 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய பெüலிங்கில் மீகன் ஷட், ஆஷ்லே கார்டனர், டார்சி பிரவுன், ஜெஸ் ஜோனசென் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com