
ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 1000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் ஷுப்மன் கில்.
23 வயது ஷுப்மன் கில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்துக்கு முன்பு, 13 டெஸ்டுகள், 18 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் 87 பந்துகளில் தனது 3-வது ஒருநாள் சதத்தை எடுத்தார் ஷுப்மன் கில்.
இன்று, 109 ரன்களை எடுத்தபோது 1000 ஒருநாள் ரன்களைப் பூர்த்தி செய்தார். 18 இன்னிங்ஸில் 1000 ஒருநாள் ரன்களை எடுத்த ஷுப்மன் கில், இந்த இலக்கை விரைவாக எட்டிய இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு, விராட் கோலி, 24 இன்னிங்ஸில் 1000 ரன்களை எடுத்தார்.
மேலும் 1000 ரன்களை விரைவாக எடுத்த வீரர்களில் கில்லுக்கு 2-வது இடம். பாகிஸ்தானின் ஃபகார் ஸமான் 18 இன்னிங்ஸிலும் இமாம் உல் ஹக், கில் ஆகிய இருவரும் 19 இன்னிங்ஸிலும் இந்த இலக்கை அடைந்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.