ஷர்துல் தாக்குரை நாங்கள் இப்படி அழைப்போம்: ரோஹித் சர்மா

நியூசிலாந்துக்கு அணிக்கு எதிராகச் சிறப்பாக விளையாடிய ஷர்துல் தாக்குரைப் பாராட்டியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.
ஷர்துல் தாக்குரை நாங்கள் இப்படி அழைப்போம்: ரோஹித் சர்மா

நியூசிலாந்துக்கு அணிக்கு எதிராகச் சிறப்பாக விளையாடிய ஷர்துல் தாக்குரைப் பாராட்டியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 3-0 என முழுமையாக வென்றது இந்தியா. ஏற்கெனவே முதல் இரு ஆட்டங்களை வென்று இந்தியா ஒருநாள் தொடரைக் கைப்பற்றி விட்ட நிலையில், கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் ஆட்டம் இந்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 385/9 ரன்களை எடுத்தது. ரோஹித் சர்மா 101, ஷுப்மன் கில் 112, பாண்டியா 54 ரன்கள் எடுத்தார்கள். பின்னா் பேட்டிங் செய்த நியூசிலாந்து 295 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பேட்டிங்கில் 25 ரன்கள் எடுத்த ஷர்துல் தாக்குர், 3 விக்கெட்டுகளையும் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

3-வது ஒருநாள் ஆட்டத்தில் ஷர்துல் தாக்குரின் பங்களிப்பு பற்றி கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

பேட்டிங்கில் நெ.8, நெ.9 நிலைகளில் விளையாடும் ஆல்ரவுண்டர்களைப் பிடிப்பது எங்களுக்குச் சவால் தான். ஷர்துல் தாக்குரின் பேட்டிங் திறமையால் நெ.8 நிலையில் பலமாகவே உள்ளோம். முதல் ஏழு பேட்டர்கள் நன்கு பேட்டிங் செய்தால் அதற்கேற்றாற்போல அணியைத் தேர்வு செய்யலாம். இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் வெவ்வேறு விதமான ஆடுகளங்களில், வெவ்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும். 

முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகள் எடுக்கும் திறமை கொண்டவர் ஷர்துல் தாக்குர். ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் டெஸ்டிலும் பார்த்துள்ளோம். பலசமயங்களில் நல்ல கூட்டணியுடன் எதிரணி விளையாடிக் கொண்டிருக்கும்போது அவர் விக்கெட்டுகளை எடுத்துவிடுவார். எங்களுக்கு முக்கியமான வீரர் அவர். இதுபோல தொடர்ந்து நன்கு விளையாடினால் அணிக்கு வெற்றிகள் கிடைக்கும். டாம் லதமின் விக்கெட்டை எடுப்பது பற்றி விராட் கோலி, பாண்டியா ஆகியோருடன் விவாதித்து அதுபோல வீசியுள்ளார். அந்தத் திட்டம் தீட்டப்பட்டதில் என் பங்களிப்பு இல்லை (சிரிக்கிறார்). எங்கள் அணியில் ஷர்துல் தாக்குரை மந்திரவாதி (மெஜிசியன்) என்று அழைப்போம். அவர் இன்னும் நிறைய ஆட்டங்களில் விளையாட வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com