

லீட்ஸ் நகரில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவில் பேட்டா்கள் சோபிக்காமல் போயினா். மிட்செல் மாா்ஷ் (118 ரன்கள்) தனியொருவராக சதமடித்து ரன்கள் சோ்த்ததால் அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோா் 263-ஐ எட்டியது. இங்கிலாந்து பௌலிங்கில் மாா்க் வுட் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.
முதல் இன்னிங்ஸில் ஆஸி.263 ரன்களுக்கும் இங்கிலாந்து 237 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இதனையடுத்து ஆஸி. இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி வருகிறது. 2ஆம் நாள் முடிவில் ஆஸி. 116/4 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹட் 18*, மிட்செல் மார்ஷ் 17* ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள்.
இதையும் படிக்க: உலக சாதனைக்கு மிக அருகில் ஸ்டூவர்ட் பிராட்!
இந்நிலையில் இன்று இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நடக்கவிருந்த போட்டி மழையினால் தாமதமாகியுள்ளது.
2-0 என ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரில் முன்னிலை வகிக்கிறது. டெஸ்டில் 3வது நாளை ‘மூவிங் டே’ என்று அழைப்பர். இதை வைத்து எந்த அணி வெற்றி பெறும் என்பதை கணிக்கலாம்.
3 டெஸ்ட் போட்டிகளிலும் மழை ஒருநாளாவது தவறாமல் வந்து விடுகிறது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மழை- 3, இங்கிலாந்து -0 என கிண்டலாக மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.