உலகின் தலைசிறந்த பேட்டரான ரிக்கி பாண்டிங்கின் விக்கெட்டினை 19வது வயதிலேயே எடுக்கும் போது இஷாந்த் சர்மா மீது கிரிக்கெட் ரசிகர்கள் பார்வை விழுந்தது. இந்தியாவில் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய 2வது வேகப்பந்து வீச்சாளரும் இவரேதான்.
105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா 311 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2021ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்.
80 ஒருநாள், 105 டெஸ்ட், 14டி20 போட்டிகள் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா முதன்முறையாக வர்ணணையாளராக களமிறங்க உள்ளார். 34 வயதான இஷாந்த் சர்மா இந்தியா - மே.இ.தீவுகள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் ஹிந்தி வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.
Ishant Sharma, whose only 10-wicket haul in Tests came against the #WestIndies - will be in our comm box for India's upcoming series!#SabJawaabMilenge only on #JioCinema #WIvIND | @ImIshant pic.twitter.com/gL0xNxnok1
â JioCinema (@JioCinema) July 9, 2023
மேற்கிந்த தீவுகள் அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளதை பற்றியும் டெஸ்ட் கிரிக்கெட் குறித்தும் பேசுவார் என ஜியோ சினிமாஸ் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: கனடா ஓபன்: அரையிறுதியில் பி.வி.சிந்து போராடி தோல்வி!
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை 12ஆம் தேதி தொடங்குகிறது.
ஓய்விற்குப் பிறகு வர்ணனையாளராக செயல்படுவதே வழக்கமாக இருந்தாலும் சில வீரர்கள் ஓய்வுக்கு முன்னமே கமெண்டரி செய்துள்ளனர். ஏற்கனவே, தினேஷ் கார்த்திக் இதுபோல வர்ணனையாளராக செயல்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெகவின் முதன்மைச் செய்தித் தொடா்பாளா்களாக அமைச்சா்கள் சி.டி.ஆா். நிா்மல் குமாா், ஆ.ராஜ்மோகன்

யு-17 உலக மல்யுத்தம்: இந்தியாவுக்கு 13 பதக்கம்

சென்னை விமான நிலையத்தில் பணிகள் முடிந்தும் திறக்கப்படாத பயணிகள் ஓய்வுக் கூடம்!

4.8.1976: த.நா. நகர நில உச்சவரம்பு சட்டம் அமலுக்கு வந்தது!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



