சீனாவில் நடைபெற உள்ள 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய ஆடவர், மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் செப்.23 முதல் அக்.8வரை நடைபெறுமென ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த அஸ்வின்!
இதற்கு முன்பாக இந்திய அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டிற்காக விளையாட அனுமதி பெறவில்லை. இந்த முறை பிசிசிஐ அனுமதியளித்துள்ளது. ஆடவர் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் தோனி தலைமையில் ருதுராஜ் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இதையும் படிக்க: மே. இ. தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி!
ஆடவர் அணிக்கான போட்டிகள் செப்.28ஆம் நாள் தொடங்கி அக்.8ஆம் நாள் முடிவடைய உள்ளது.
ஆடவர் அணி: ருதுராஜ் கெயிக்வாட் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ராகுல் த்ரிப்பாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அஹமது, ரவி பிஸ்னோய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஷிவம் மாவி, ஷிவம் டுபே, ப்ரப்சிம்ரன் சிங் (கீப்பர்).
மாற்று வீரர்கள்: யஷ் தாகுர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்ஷன்.
இந்திய மகளிர் அணி:
ஹர்மன்ப்ரீத் கெளர் (கேப்டன்), மந்தனா, ஷெஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் ( கீப்பர்), அமன்ஜோத் கெளர், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி, டிடாஸ் சது, ராஜேஸ்வரி கயாக்வாட், மின்னு மணி, கனிகா அகுஜா, உமா ஷெட்ரி ( கீப்பர்), அனுஷா பரெட்டி.
மாற்று வீராங்கனைகள்: ஹர்லீன் தியோல், காஷ்வீ கெளதம், ஸ்னே ராணா, சாயிகா, பூஜா வஸ்த்ரகர்.
செப்.19 முதல் 28 வரை மகளிர் அணிக்கான போட்டிகள் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


