ஐசிசியின் 3 கோப்பைகளை வென்ற ஒரே இந்தியக் கேப்டனாக தோனி இருக்கிறார். கீப்பர்- பேட்டர் என்பதை விடவும் அணியின் தலைவன் என்பதில் அனைவருக்கும் தோனி மீது தனிவிதமான அன்பு இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக 5 முறை கோப்பையை வென்றுள்ளார். அதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு தோனி எப்போதும் நெருக்கமான ஒரு கிரிக்கெட் வீரர். முன்னம் ஒருநாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தோனியை தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை என அழைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: எனது மனைவிக்கு என்னைவிட இவரைத்தான் பிடிக்கும்: ஸ்டூவர்ட் பிராட்
தோனிக்கு நாய்கள், பைக்குகள் மீது அளவற்ற ப்ரியம் என்பது அவரது ரசிகர்களுக்கு அனைவருக்கும் தெரியும். பிறந்த்நாளை நாய்களுடன் கொண்டாடிய தோனியின் விடியோ இணையத்தில் வைரலானது.
தற்போது இந்திய முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிர்சாத் தோனியின் வீட்டில் அவர் சேகரித்தி வைத்திருக்கும் இருசக்கர வாகனங்கள், கார்களின் விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோவில் வெஙடேஷ் பிர்சாத மற்றும் சில நண்பர்கள் தோனியுடன் இருக்கிறார்கள்.
One of the craziest passion i have seen in a person. What a collection and what a man MSD is . A great achiever and a even more incredible person. This is a glimpse of his collection of bikes and cars in his Ranchi house.
â Venkatesh Prasad (@venkateshprasad) July 17, 2023
Just blown away by the man and his passion @msdhoni pic.twitter.com/avtYwVNNOz
இந்தப் பதிவில் வெங்கடேஷ் பிரசாத், “இவ்வளவு ஆர்வம் மிகுந்த மனிதரை நான் பார்த்ததேயில்லை. எவ்வளவு வகையான பைக்குகள், கார்கள். என்ன மாதிரியான் நபர் தோனி. மிகப்பெரிய சாதனையாளர், அதைவிடவும் நல்ல மனிதர். ராஞ்சி வீட்டில் உள்ள அவரது பைக் கலெக்ஷன்கள் குறித்து சிறிய க்ளிம்ஸ் விடியோ இது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தோனி வீட்டில் இருக்கும் பைக்குகள், கார்கள் ஷோரூமில் இருப்பது போலுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை, திருநெல்வேலி உள்பட 5 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

மதுரா நீதிமன்ற விசாரணைக்கு பின் கடத்தப்பட்ட நபா் மீட்பு: 7 போ் கைது

விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ பிணை கோரி மனு: உயா் நீதிமன்றத்தில் முறையீடு

தமிழகத்தின் ஆன்மிக கலாசாரத்தை போற்ற வேண்டும்: தலைமை தோ்தல் ஆணையர்!
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



