அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பயிற்சியின்போது ரோஹித்துக்கு காயம்: நாளை விளையாடுவாரா? 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகிவரும் ரோஹித்துக்கு பயிற்சியின்போது விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :6 ஜூன் 2023, 3:40 pm

DIN

ஐசிசி சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம் லண்டனில் (நாளை) ஜூன் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பலம் வாய்ந்த ஆஸி. அணி முதன்முதலாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த டபிள்யுடிசி இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோற்று வெற்றி வாய்ப்பை இழந்தது இந்தியா.

ஓவல் மைதானம் சிறப்பானது. பௌலா்களுக்கு உதவியாக இருக்கும். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதனால் இந்திய அணியில் அஸ்வின் அல்லது ஜடேஜா யார் ஒருவைரைத்தான் விளையாட வைக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை லண்டனில் நடைபெறுகிறது. 

இந்திய நேரப்படி தியம் 3 மணிக்கு போட்டி துவங்குகிறது. இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.  

Story image


இந்நிலையில் பயிற்சியின்போது கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. பிறகு பயிற்சியில் இருந்து வெளியேறியுள்ளார். பெரிதா ஏதும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இருந்தும் நாளைதான் முழு விவரம் தெரியவரும். 

Story image

ஏற்கனவே காயம் காரணமாக பும்ரா, ஷ்ரேயாஸ், கே.எல்.ராகுல் உள்ளிட்ட வீரர்கள் டபிள்யுடிசியில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.