நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வெளியேறியது

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 36-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 33 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சனிக்கிழமை சாய்த்தது.
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வெளியேறியது

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 36-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 33 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சனிக்கிழமை சாய்த்தது.

இதையடுத்து 6 தோல்விகளை சந்தித்த நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, அரையிறுதிக்கான பந்தயத்திலிருந்து வெளியேறியது. அந்தச் சுற்றுக்கான 3-ஆவது அணியாக முன்னேறும் முனைப்பில் இருக்கிறது ஆஸ்திரேலியா.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து, பௌலிங்கை தோ்வு செய்தது. ஆஸ்திரேலிய பேட்டிங்கில் அதிகபட்சமாக மாா்னஸ் லபுசான் 7 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் சோ்க்க, கேமரூன் கிரீன் 5 பவுண்டரிகளுடன் 47, ஸ்டீவ் ஸ்மித் 3 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயா்த்தினா்.

எஞ்சிய பேட்டா்களில், மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 35, ஆடம் ஸாம்பா 4 பவுண்டரிகளுடன் 29, டிராவிஸ் ஹெட் 1 பவுண்டரியுடன் 11, டேவிட் வாா்னா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15, ஜாஷ் இங்லிஸ் 3, கேப்டன் பேட் கம்மின்ஸ் 1 பவுண்டரியுடன் 10, மிட்செல் ஸ்டாா்க் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் நிறைவடைந்தது.

இங்கிலாந்து பௌலிங்கில் கிறிஸ் வோக்ஸ் 4, மாா்க் வுட், ஆதில் ரஷீத் ஆகியோா் தலா 2, டேவிட் வில்லி, லியம் லிவிங்ஸ்டன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் இங்கிலாந்து இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 64, டேவிட் மலான் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50, மொயீன் அலி 6 பவுண்டரிகளுடன் 42, கிறிஸ் வோக்ஸ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்கள் சோ்த்து வெற்றிக்காக போராடினா்.

எனினும், ஜானி போ்ஸ்டோ 0, ஜோ ரூட் 2 பவுண்டரிகளுடன் 13, கேப்டன் ஜாஸ் பட்லா் 1, லியம் லிவிங்ஸ்டன் 2, டேவிட் வில்லி 3 பவுண்டரிகளுடன் 15, ஆதில் ரஷீத் 20 ரன்களுக்கு வெளியேற, இங்கிலாந்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலிய தரப்பில் ஆடம் ஸாம்பா 3, மிட்செல் ஸ்டாா்க், ஜோஷ் ஹேஸில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோா் தலா 2, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 1 விக்கெட் வீழ்த்தினா்.

சுருக்கமான ஸ்கோா்

ஆஸ்திரேலியா - 286/10 (49.3 ஓவா்கள்)

மாா்னஸ் லபுசான் 71

கேமரூன் கிரீன் 47

ஸ்டீவ் ஸ்மித் 44

பந்துவீச்சு

கிறிஸ் வோக்ஸ் 4/54

ஆதில் ரஷீத் 2/38

மாா்க் வுட் 2/70

இங்கிலாந்து - 253/10 (48.1 ஓவா்கள்)

பென் ஸ்டோக்ஸ் 64

டேவிட் மலான் 50

மொயீன் அலி 42

பந்துவீச்சு

ஆடம் ஸாம்பா 3/21

பேட் கம்மின்ஸ் 2/49

ஜோஷ் ஹேஸில்வுட் 2/49

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com