சர்வதேசப் போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய வீரர் விராட் கோலியால் முறியடிக்க முடியும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா தரப்பில் விராட் கோலி அதிகபட்சமாக 117 ரன்கள் குவித்தார். நேற்றையப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறிடித்தார். விராட் கோலியின் நேற்றைய சதம் ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த 50-வது சதமாகும்.
இதையும் படிக்க: ஒருநாள் போட்டியா? டெஸ்ட்டா? திணறும் தெ.ஆ. அணி!
இந்த நிலையில், சர்வதேசப் போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய வீரர் விராட் கோலியால் முறியடிக்க முடியும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சச்சின் டெண்டுல்கர் சர்வதேசப் போட்டிகளில் 100 சதங்கள் அடிப்பார் என்றும், மற்றொரு வீரர் அந்த சாதனைக்கு மிக அருகில் வருவார் என்றும் யார் நினைத்திருப்பார்கள். சர்வதேசப் போட்டிகளில் விராட் கோலி 80 சதங்கள் அடித்துள்ளார். அதில் 50 சதங்கள் ஒருநாள் போட்டிகளில் அடித்தது. அதுவே அவரது அதிகபட்ச சதங்கள் எண்ணிக்கையாகவும் மாறிவிட்டது. நம்பமுடியாத விதமாக இருக்கிறது. முடியாதது என்பது எதுவும் இல்லை என்பதுபோல் தற்போது வீரர்களின் ஆட்டம் உள்ளது.
இதையும் படிக்க: அபார பந்துவீச்சு: ஷமிக்கு முத்தமளித்த அஸ்வின்!
விராட் கோலியின் அடுத்த 10 போட்டிகளில் நீங்கள் மேலும் 5 சதங்களை எதிர்பார்க்கலாம். அனைத்து வடிவிலானப் போட்டிகளிலும் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். அவர் இன்னும் 3-4 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் என நினைக்கிறேன். அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்பட்டு விராட் கோலி சதம் விளாசினார். அவர் இந்த உலகக் கோப்பையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நீலகிரி மாவட்டத்தில் 20 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
திருப்பூா் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் 256 வேட்புமனுக்களில் 71 மனுக்கள் தள்ளுபடி
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


