5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

விராட் கோலியின் சாதனையை யாராலும் நெருங்க முடியாது: முன்னாள் இந்திய வீரர்!

விராட் கோலியின் சாதனையை யாராலும் நெருங்க முடியாது என நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் குண்டப்ப விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 நவம்பர் 2023, 3:31 pm IST

விராட் கோலியின் சாதனையை யாராலும் நெருங்க முடியாது என நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் குண்டப்ப விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசி சச்சின் டெண்டுல்கரின் முன்னிலையில் அவரது சாதனையை முறியடித்தார் விராட் கோலி. நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்பு வரை ஒருநாள் போட்டிகளில் சச்சின் அடித்த 49 சதங்களே தனிநபர் ஒருவரின் அதிகபட்ச சதங்களாக இருந்தது. நியூசிலாந்துக்கு எதிரானப் போட்டியில் ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை விளாசி அசத்தினார் விராட் கோலி. இதன்மூலம் சச்சினின் சாதனையையும் முறியடித்தார்.

இந்த நிலையில், விராட் கோலியின் சாதனையை யாராலும் நெருங்க முடியாது என நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் குண்டப்ப விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சச்சினின் சதங்கள் சாதனையை ஒருவரால் நெருங்க முடியும் என்றால் அது விராட் கோலியால் மட்டுமே முடியும் என சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தேன். அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கவில்லை. அவரது சதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவர் தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கும் விதம் சிறப்பாக உள்ளது. அவரது சிறப்பான ஆட்டத்தினால் அவரால் தொடர்ச்சியாக அரைசதங்களைக் கடந்து ரன்கள் குவிக்க முடிகிறது. சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். மற்ற வீரர்களால் விராட் கோலியின் இந்த சாதனையை நெருங்க முடியாது என நான் நம்புகிறேன்.

இதையும் படிக்க: சிகரம் தொட்ட கோலி...

ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா 30 -க்கும் அதிகமான சதங்கள் அடித்துள்ள போதிலும், விராட் கோலியின் சாதனையை நெருங்க அவருக்கு மேலும் பல சதங்கள் தேவைப்படுகின்றன. ரோஹித் சர்மாவைத் தவிர விராட் கோலியின் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள மற்ற வீரர்களை என்னால் சுட்டிக்காட்ட முடியாது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.