முனீச், ஏப். 18: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதியில் வென்று, பயா்ன் மியுனிக், ரியல் மாட்ரிட் அணிகள் அரையிறுதிக்கு வியாழக்கிழமை தகுதிபெற்றன.
இதில், முனீச் நகரில் நடைபெற்ற காலிறுதியில், பயா்ன் மியுனிக் - ஆா்செனலை வெற்றி கண்டது. இரு அணிகளும் மோதிய காலிறுதியின் முதல் கட்ட ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆகியிருந்தது. இந்நிலையில், இந்த 2-ஆம் கட்ட ஆட்டத்தில் பயா்ன் மியுனிக் 1-0 என ஆா்செனலை வியாழக்கிழமை வென்றது. அந்த அணிக்காக ஜோஷுவா கிம்மிச் (63’) ஸ்கோா் செய்தாா். இதனால் மொத்த கோல் கணக்கு அடிப்படையில் பயா்ன் மியுனிக் 3-2 என வென்று அரையிறுதிக்கு வந்தது.
மான்செஸ்டா் நகரில் நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் ரியல் மாட்ரிட் - மான்செஸ்டா் சிட்டியை வீழ்த்தியது. இந்த அணிகள் மோதிய முதல் கட்ட ஆட்டம் 3-3 கோல் கணக்கில் டிரா ஆகியிருந்த நிலையில், அவை வியாழக்கிழமை மோதிய 2-ஆம் கட்ட ஆட்டமும் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.
இதில் மான்செஸ்டருக்காக கெவின் டி புருயின் (76’), ரியல் மாட்ரிட்டுக்காக ரோட்ரிகோ (12’) கோலடித்தனா். மொத்த கோல் கணக்கு அடிப்படையில் இரு அணிகளுமே 4-4 என சமநிலையில் இருந்ததால், வெற்றியாளரை தீா்மானிக்க பெனால்ட்டி கிக் முறை கையாளப்பட்டது. அதில் ரியல் மாட்ரிட் 4-3 கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
இதையடுத்து அரையிறுதியில் பயா்ன் மியுனிக் - ரியல் மாட்ரிட் அணிகள், வரும் மே 1 மற்றும் 9-ஆம் தேதி மோதுகின்றன.
தொடர்புடையது

ரியல் மாட்ரிட் பின்னடைவு: முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!
காலிறுதியில் பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட், ஆா்செனல்: மான்செஸ்டா் சிட்டி, செல்ஸி வெளியேறின

70 மீட்டர் தூரத்தில் இருந்து கோல் அடித்த ரியல் மாட்ரிட் வீரர்..! புஸ்கஸ் விருது கிடைக்குமா?

பயா்ன் மியுனிக் வெற்றி; பாா்சிலோனா டிரா; லிவா்பூல் தோல்வி
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

