டி20 உலகக் கோப்பையில் ஜஸ்பிரித் பும்ராவின் சிறப்பான தருணங்களை பகிர்ந்து கொண்ட ரவி சாஸ்திரி!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ரா குறித்து ரவி சாஸ்திரி பகிர்ந்து கொண்டது...
டி20 உலகக் கோப்பையில் ஜஸ்பிரித் பும்ராவின் சிறப்பான தருணங்களை பகிர்ந்து கொண்ட ரவி சாஸ்திரி!
Published on
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்பட்ட தருணங்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. இதன்மூலம், இந்திய அணியின் நீண்ட கால கோப்பைக்கான தேடுதல் முடிவுக்கு வந்தது. 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

டி20 உலகக் கோப்பையில் ஜஸ்பிரித் பும்ராவின் சிறப்பான தருணங்களை பகிர்ந்து கொண்ட ரவி சாஸ்திரி!
யார் இந்த ஏஞ்செலா காரினி? இமென் கெலிஃபுடன் சண்டையிட மறுக்கக் காரணம் என்ன?

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்பட்ட தருணங்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா அவரால் என்ன முடியும் என்பதை இந்த உலகுக்கு காட்டியுள்ளார். ஒருவரது கிரிக்கெட் பயணத்தில் பந்தினை அவரது கட்டுப்பாட்டுக்குள் எப்போதும் வைத்திருப்பது கடினம். ஆனால், ஜஸ்பிரித் பும்ரா பந்தினை அவரது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

டி20 உலகக் கோப்பையில் ஜஸ்பிரித் பும்ராவின் சிறப்பான தருணங்களை பகிர்ந்து கொண்ட ரவி சாஸ்திரி!
3-வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட மானு பாக்கர்!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகமது ரிஸ்வானின் விக்கெட்டினை அவர் கைப்பற்றியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மார்கோ ஜேன்சனின் விக்கெட்டினைக் கைப்பற்றியது அபாரமாக இருந்தது. அந்த தருணத்தில் மார்கோ ஜேன்சனின் விக்கெட் மிக மிக முக்கியமான விக்கெட். ஜேன்சனின் விக்கெட்டுக்கு முன்பாக ஹார்திக் பாண்டியா க்ளாசனின் விக்கெட்டினை எடுத்து அசத்தினார். இருப்பினும், ஜேன்சனின் விக்கெட் கிடைத்தது மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன்.

ஆட்டத்தின் போக்கை ஒரு சிலர் மட்டுமே தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். வெள்ளைப்பந்து போட்டிகளில் அப்போது வாசிம் அக்ரம், வாகர் யூனிஸ் மற்றும் ஷேன் வார்னே ஆகியோர் ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பந்து எவ்வாறு பிட்ச் ஆக வேண்டும், எப்படி திரும்ப வேண்டும், எந்த ஸ்டம்பை பதம் பார்க்க வேண்டும் என்பதை பந்துக்கு சொல்லிக் கொடுத்து பந்துவீசுவதில் ஷேன் வார்னே ஜாம்பவான். இவர்களின் வரிசையில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com