
39 வயதாகும் உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டது 2022-லும் நிறைவேறவில்லை.
போர்ச்சுகல் அணிக்காக130 கோல்களும் ஒட்டுமொத்தமாக 897 கோல்களையும் ரொனால்டோ அடித்துள்ளார்.
யுஆர் கிறிஸ்டியோனா என்ற பெயரில் ரொனால்டோ புதியதாக யூடியூப் சேனலை தொடங்கினார். 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் (1 கோடி) சப்ஸ்கிரைபர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.
ஆண்டுக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 16ஆயிரம் கோடி ரூபாய்)க்கு ரொனால்டோ வை சௌதியின் கிளப் அணி ஒப்பந்தம் செய்தது. 2025 வரை இந்த அணிக்காக விளையாட உள்ளார் ரொனால்டோ.
ஏற்கனவே சமூக வலைதளங்களில் எக்ஸில் 112.5 மில்லியன் ஃபாலோயர்களும் முகநூலில் 170 மில்லியன் ஃபாலோயர்களும் இன்ஸ்டாவில் 636 மில்லியன் ஃபாலோயர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக ஹேம்ஸ்டர் கோம்பட் 7 நாள்களில் இந்த சாதனையை படைத்திருந்தார். இதை ஒரே நாளில் முறியடித்து ரொனோல்டா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.