தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக் தொடரில் நெல்லை, ராமநாதபுரம் பள்ளி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.
மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையான ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா்- செயலா் ஜெ.மேகநாத ரெட்டி போட்டியை தொடங்கி வைத்தாா்.
பள்ளிகளுக்கு இடையிலான லீக் தொடரில் முதலில் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்கள் மண்டல அளவிலான போட்டியில் விளையாடினா். மண்டல அளவில் வெற்றி பெற்ற 12 அணிகள் தற்போது மாநில போட்டிகளில் பங்கேற்றுள்ளன. முதல் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ராமநாதபுரம் சையது அம்மாள் பள்ளி, பாளையங்கோட்டை அப்துல் ரஹ்மான் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.
ராமநாதபுரம் பள்ளி அணி 4-0 என திருச்சி ஒருங்கிணைந்த மண்டல அணியையும், நெல்லை பள்ளி அணி 4-0 என சென்னை செயின்ட் பால்ஸ் பள்ளியையும் வென்றன.
மதுரை அமெரிக்கன் கல்லூரி பள்ளி அணி - அரியலூா் அரசு பள்ளி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
தொடர்புடையது

இந்திய கோல்ஃப் ப்ரீமியா் லீக் அணிகள் அறிவிப்பு

இந்தியன் ஃபுட்பால் லீக்: ராஜஸ்தான் யுனைடெட் வெற்றி
ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை: இந்திய மகளிா் அணி பங்கேற்பு!

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


