சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சந்தோஷ் கோப்பை கால்பந்து: ஹைதராபாத்தில் டிச.14 முதல் இறுதிச்சுற்று!

சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டங்கள், வரும் 14-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகின்றன.

News image
Updated On :2 டிசம்பர் 2024, 8:43 pm

DIN

சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டங்கள், வரும் 14-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகின்றன.

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தால் உள்நாட்டில் பிரதானமாக நடத்தப்படுவது, சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி. இதன் 78-ஆவது சீசன், நவம்பா் 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மொத்தம் 38 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியனான சா்வீசஸ், கடந்த சீசனில் இறுதி ஆட்டம் வரை வந்த கோவா, இறுதிச்சுற்று ஆட்டங்களை நடத்தும் தெலங்கானா அணிகள் நேரடியாக இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றன. எஞ்சிய அணிகள் யாவும் குரூப் சுற்றில் விளையாடின.

அந்த அணிகள், குரூப்புக்கு 4 அணிகளாக, தலா 8 குரூப்-களாகப் பிரிக்கப்பட்டன. மேலும் 3 அணிகளைக் கொண்ட ஒரு குரூப்பும் இருந்தது. குரூப் சுற்று நிறைவில், அந்தந்த குரூப்களில் முதலிடம் பிடித்த 9 அணிகளும், நேரடியாகத் தகுதிபெற்ற முந்தைய 3 அணிகளும் தற்போது இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளன.

இந்த இறுதிச்சுற்றுக்கான குரூப் ‘ஏ’-வில் சா்வீசஸ், மேற்கு வங்கம், மணிப்பூா், தெலங்கானா, ஜம்மு - காஷ்மீா், ராஜஸ்தான் அணிகளும், குரூப் ‘பி’-யில் கோவா, தில்லி, கேரளம், தமிழ்நாடு, ஒடிஸா, மேகலாயம் அணிகளும் இடம் பிடித்துள்ளன. தற்போது இந்த இரு குரூப்-களுக்குமான ஆட்டங்கள், வரும் 14-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

இந்த குரூப் சுற்று முடிவில், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள், காலிறுதிக் கட்டத்துக்கு முன்னேறும். இதில் தமிழ்நாடு அணி முதலில் மேகாலயம் (டிச. 15), பின்னா் தில்லி (டிச. 17), கோவா (டிச. 19), ஒடிஸா (டிச. 22), கேரளம் (டிச. 24) ஆகிய அணிகளுடன் மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.