டெஸ்ட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் சாதனை!

2011 ஆம் ஆண்டு டெஸ்ட்டில் அறிமுகமான அஸ்வின் தனது 97-வது போட்டியில் 500-வது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஸாக் கிராலியின் விக்கெட்டினை வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்தார் அஸ்வின்.

ரவிச்சந்திரன் அஸ்வின்
நாங்கள் குடிசைப் பகுதியிலிருந்து வந்தவர்கள்: சர்ஃபராஸ் கானின் தந்தை உருக்கம்!

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக உள்ளார். அந்த சாதனைப் பட்டியலில் இரண்டாவது நபராக அஸ்வின் இணைந்துள்ளார்.

அஸ்வினுக்கு முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் (800 விக்கெட்டுகள்) மற்றும் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் (517 விக்கெட்டுகள்) ஆகிய ஆஃப் ஸ்பின்னர்கள் இந்தப் பட்டியலில் ஏற்கனவே உள்ளனர்.

ரவிச்சந்திரன் அஸ்வின்
மன்னிப்பு கேட்ட ஜடேஜா: ரன் அவுட் சர்சை குறித்து மனம் திறந்த சர்ஃபராஸ் கான்!

கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அஸ்வின் தனது 97-வது போட்டியில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 9-வது வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com