
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் டி20 போட்டி இன்று (பிப்ரவரி 17) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை முதலில் பேட் செய்தது.
இலங்கை அணி 19 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் வனிந்து ஹசரங்கா அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து சமரவிக்கிரம அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூக்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். நவீன் உல் ஹக் மற்றும் அஸ்மதுல்லா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.