பேஷ்பால் யுக்தியைத் தொடர்வோம்: பிரண்டன் மெக்கல்லம்

இந்தியாவுக்கு எதிராக மிகப் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது.
பேஷ்பால் யுக்தியைத் தொடர்வோம்: பிரண்டன் மெக்கல்லம்

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது வருத்தமளிப்பதாகவும், மீதமுள்ள போட்டிகளில் பேஷ்பால் யுக்தியை தொடர உள்ளதாகவும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பேஷ்பால் யுக்தியை அந்த அணியின் முன்னாள் கேப்டன்கள் உள்பட பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

பேஷ்பால் யுக்தியைத் தொடர்வோம்: பிரண்டன் மெக்கல்லம்
ஐபிஎல் தொடங்கும் தேதி அறிவிப்பு!

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது வருத்தமளிப்பதாகவும், மீதமுள்ள போட்டிகளில் பேஷ்பால் யுக்தியை தொடர உள்ளதாகவும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான மிகப் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்வி வருத்தமளிக்கிறது. இருப்பினும், இந்த நிலையை மாற்றி இந்தியாவுக்கு நாங்கள் அழுத்தத்தை ஏற்படுத்துவோம். இன்னும் 7-8 நாட்களில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியில் விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

பேஷ்பால் யுக்தியைத் தொடர்வோம்: பிரண்டன் மெக்கல்லம்
பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக இரண்டு தோல்விகள்!

அனைவருக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது. அது நல்ல விமர்சனமாக இருந்தாலும் சரி, மோசமான விமர்சனமாக இருந்தாலும் சரி. அந்த விமர்சனங்களை நாம் கேட்டுக் கொள்கிறோமா அல்லது இல்லையா என்பது நம்மிடம்தான் உள்ளது.

இங்கிலாந்து வீரர்களுக்கு மத்தியில் நம்பிக்கை வலுவாக உள்ளது. வெளியே உள்ளவர்கள் கூறுவதை உள்ளே எடுத்து வந்தால் பிரச்னை உருவாகி விடும். தற்போது அணிக்கு உள்ள பிரச்னையும் இதுதான். பேஷ்பால் யுக்தியில் நாங்கள் வளர்ச்சியடைந்து வருகிறோம். அதில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். டெஸ்ட் போட்டியை மேலும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றுவோம். மேலும் பல வெற்றிகளை பெறுவோம் என்றார்.

பேஷ்பால் யுக்தியைத் தொடர்வோம்: பிரண்டன் மெக்கல்லம்
பேஷ்பால் யுக்தியை கைவிடுங்கள் ஜோ ரூட்; ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் அறிவுரை!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 23 முதல் ராஞ்சியில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com