இந்திய அணி இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்: இர்பான் பதான்

இந்த ஆண்டில் அணியில் உள்ள வேகப் பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்: இர்பான் பதான்

இந்த ஆண்டில் அணியில் உள்ள வேகப் பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32  ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி அணியில் இடம்பெறாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்துவீசினாலும், அவருக்கு உறுதுணையாக கூட்டணி அமைத்து மற்ற வேகப் பந்துவீச்சாளர்கள் பந்துவீசி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கத் தவறினர். 

இந்த நிலையில், இந்த ஆண்டில் அணியில் உள்ள வேகப் பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டுமென  இர்பான் பதான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த ஆண்டில் சிறப்பான வேகப் பந்துவீச்சாளர்கள் அடங்கிய அணியை இந்தியா உருவாக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறவில்லை. பும்ரா அணியில் இருக்கிறார். ஆனால், அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் என்ன ஆகும். கடந்த காலங்களில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம்.

அதனால், அவருக்கு காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வேகப் பந்துவீச்சாளர்கள் அதிகம் அடங்கிய ஒரு குழுவை உருவாக்காவிட்டால் நமக்கு முகமது ஷமி, பும்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் கிடைக்க மாட்டார்கள். தரமான 7-8 வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com