ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மழை, போதிய வெளிச்சமின்மையால் போட்டி பாதிப்பு!

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தப்பட்டது.

News image
Updated On :4 ஜனவரி 2024, 9:55 am

DIN

சிட்னியில் புதன்கிழமை தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டாப் ஆா்டா் பேட்டா்கள் சோபிக்காமல் போக, 96 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாற, மிடில் ஆா்டருக்கு பிறகு வந்த முகமது ரிஸ்வான், அகா சல்மான், ஆமீா் ஜமால் நிதானமான விளையாடியதால் சொல்லிக்கொள்ளும் படியான ஸ்கோரை எட்டியது.

இந்த இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், கடந்த ஆட்டத்தையும் சோ்த்து தொடா்ந்து 3 இன்னிங்ஸ்களில் 5 விக்கெட்டுகள் சாய்த்து பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக தொடா்கிறாா். 

டேவிட் வார்னர் தனது கடைசி டெஸ்டில் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். திடீரென ஏற்பட்ட பவுன்சர் பந்தினால் ஆட்டமிழந்தார். 

Story image

போதிய வெளிச்சமின்மையால் 2-ஆம் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. 46 ஓவர்கள் மட்டுமே இன்று பாகிஸ்தான்  வீரர்கள் வீசினார்கள். கிட்டதட்ட பாதி ஓவர் மட்டுமே வீசப்பட்டுள்ளது. பின்னர் மழை குறுக்கிட்டதால் 2ஆம் நாள் போட்டி முடிவுக்கு வந்தது. 

2ஆம் நாள் ஆட்ட முடிவில் ஆஸி. 116/2 ரன்கள் எடுத்தார்கள். ஸ்மித் 6 ரன்கள், லபுஷேன் 23 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.