டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது முறையாக 20 விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப் பந்துவீச்சாளர்கள் அசத்தல்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 20 விக்கெட்டுகளை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் வீழ்த்தி அசத்தினர். 
டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது முறையாக 20 விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப் பந்துவீச்சாளர்கள் அசத்தல்!
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 20 விக்கெட்டுகளை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் வீழ்த்தி அசத்தினர். 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் 20 விக்கெட்டுகளையும் (இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து) இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றி அசத்தினர். பும்ரா 8 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 7 விக்கெட்டுகளையும், முகேஷ் 4 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

டெஸ்ட் போட்டி ஒன்றில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும், கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

மூன்று முறை...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2018 -  பும்ரா (7 விக்கெட்டுகள்), முகமது ஷமி (6 விக்கெட்டுகள்) , புவனேஸ்வர் குமார்  (4 விக்கெட்டுகள்)  , இஷாந்த் சர்மா (3 விக்கெட்டுகள்)

இங்கிலாந்துக்கு எதிராக, 2021 - பும்ரா (9 விக்கெட்டுகள்), முகமது ஷமி (4 விக்கெட்டுகள்) , சிராஜ் (3 விக்கெட்டுகள்), ஷர்துல் தாக்குர்  (4 விக்கெட்டுகள்)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2024 - பும்ரா (8 விக்கெட்டுகள்), முகமது சிராஜ் (7 விக்கெட்டுகள்), முகேஷ் (4 விக்கெட்டுகள்), பிரசித் கிருஷ்ணா (ஒரு விக்கெட்).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com