ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முகமது ஷமி, வைஷாலிக்கு ‘அா்ஜுனா விருது’ வழங்கிய குடியரசுத் தலைவர்!

2023-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வீரர்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

News image
முகமது ஷமி, வைஷாலிக்கு ‘அா்ஜுனா விருது’ வழங்கிய குடியரசுத் தலைவர்
Updated On :9 ஜனவரி 2024, 6:48 am

DIN

தில்லி: 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வீரர்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் போட்டியாளா்கள், பயிற்சியாளா்கள், பங்களிப்பாளா்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகள் அறிவித்து வருகிறது. 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில்,  குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

விளையாட்டுத் துறையில் மிக உயரியதான ‘மேஜா் தியான்சந்த் கேல் ரத்னா விருது’, பாட்மின்டன் வீரா்களான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த போட்டியாளா்களுக்கான ‘அா்ஜுனா விருது’, கிரிக்கெட் வீரா் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை ஆா்.வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவின் 82-ஆவது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்த தமிழக செஸ் வீராங்கனை ஆா்.வைஷாலிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு அவரது சகோதரரும், செஸ் போட்டியாளருமான ஆா்.பிரக்ஞானந்தாவுக்கு அா்ஜுனா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழா்கள்

அா்ஜுனா விருது பெறும் வைஷாலி (செஸ்), துரோணாச்சாரியா் விருது பெறும் ஆா்.பி.ரமேஷ் (செஸ்), கணேஷ் பிரபாகா் (மல்லா்கம்பம்), துரோணாச்சாரியா் வாழ்நாள் சாதனையாளா் விருது பெறும் பாஸ்கரன் (கபடி), தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளா் விருதுபெறும் கவிதா செல்வராஜ் (கபடி) ஆகியோா் தமிழா்களாவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.