தொடக்க வீரராக களமிறங்குவது ஒன்றும் புதிதல்ல: ஸ்டீவ் ஸ்மித்

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ளது ஒன்றும் புதிதல்ல என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
தொடக்க வீரராக களமிறங்குவது ஒன்றும் புதிதல்ல: ஸ்டீவ் ஸ்மித்

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ளது ஒன்றும் புதிதல்ல என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் அண்மையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். வார்னருக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக யார் களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. தனது ஓய்வுக்குப் பிறகு தொடக்க ஆட்டக்காரராக மார்கஸ் ஹாரிஸ் களமிறக்கப்படுவார் என வார்னர் கூறியிருந்தார். இதற்கிடையில், ஆஸ்திரேலிய அணியின் கேம் பான்கிராஃப்ட் அல்லது மாட் ரின்ஷா அந்த இடத்தில் களமிறக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. பின்னர், உஸ்மான் கவாஜாவுடன் தொடக்க ஆட்டக்காரராக ஸ்டீவ் ஸ்மித் களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ளது ஒன்றும் புதிதல்ல என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:  மார்னஷ் லபுஷேன் 3-வது இடத்தில் களமிறங்குவதால் நான் பேட்டிங் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பேட்டிங் செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. புதிய பந்தினை சந்திப்பது எனக்கு பிடிக்கும். கடந்த 2019  ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போட்டிகளில் நான் சீக்கிரமாக களமிறங்கி புதிய பந்தினை சந்தித்தேன். 3-வது இடத்தில் களமிறங்கி பல ஆண்டுகளாக புதிய பந்துகளில் சிறப்பாக விளையாடியுள்ளேன். அதனால், எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த தொடக்க ஆட்டக்காரர் பொறுப்பு ஒன்றும் புதிதாக இருக்கப் போவதில்லை. இந்த பொறுப்பை மகிழ்ச்சியுடனும், சவாலாகவும் எடுத்துக் கொண்டு விளையாடுவேன் என்றார். 

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற ஜனவரி 17 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com