டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இடத்துக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ஜித்தேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சனுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கான கீப்பர் யார் என்ற கேள்விக்கு நமக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் ஜித்தேஷ் சர்மா விளையாடினார். மூன்றாவது போட்டியில் மட்டும் சஞ்சு சாம்சன் விளையாடினார். முதல் டி20 போட்டியில் ஜித்தேஷ் சர்மா நன்றாக விளையாடினார். இரண்டாவது போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கடைசி டி20 போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க: 4-வது வெற்றி: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்!
இந்திய அணியின் கீப்பராக யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என என்னிடம் கேட்டால், யாரை தேர்ந்தெடுப்பது எனத் தெரியவில்லை என நான் கூறுவேன். அணியில் ஜித்தேஷ் சர்மாவின் இடம் உறுதியாகவில்லை. சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சில நாள்களாக இந்தப் போட்டியில் இஷான் கிஷன் இடம்பெறவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடவுச்சீட்டை மறுக்க எஸ்ஐஆரை காரணம் காட்டக் கூடாது: வெளியுறவு அமைச்சருக்கு மாா்க்சிஸ்ட் எம்.பி. கடிதம்

ஜொ்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பொ்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்!

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை வழக்கு: கைதான 8 பேருக்கும் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு






