தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிந்து விலகும் இங்கிலாந்து வீரர்!

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் விலகியுள்ளார். 

News image
Updated On :21 ஜனவரி 2024, 11:06 am

DIN

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் விலகியுள்ளார். 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்காக இங்கிலாந்து அணி அபு தாபியில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஹாரி ப்ரூக்  விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஹாரி ப்ரூக் விலகியுள்ளார். அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள மாட்டார். அவருக்கான மாற்று வீரரை விரைவில் இங்கிலாந்து தேர்வுக் குழு அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ஹாரி ப்ரூக் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 1181 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.