முதல் டி20: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது.
116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய நோக்கி விளையாடி வரும் இந்திய அணி பவர் பிளேவில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் அறிமுக வீரர் அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
அபிஷேக் சர்மா 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ருதுராஜ் கெய்க்வாட் (7 ரன்கள்), ரியான் பராக் (2 ரன்கள்), ரிங்கு சிங் (0 ரன்) எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இந்திய அணி பவர்பிளே முடிவில் 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...