
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று (ஜூலை 6) தொடங்கியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது.
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளைவ் மடேன் 29 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, பிரையன் பென்னட் மற்றும் டியான் மையர்ஸ் தலா 23 ரன்கள் எடுத்தனர். வெஸ்லி மதேவீர் 21 ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.