பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு கௌதம் கம்பீர் வெளியிட்ட பதிவு!
இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து கௌதம் கம்பீர் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பையுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நேர்கணால் நடத்தப்பட்டது. பலரும் எதிர்பார்த்தது போலவே இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் கௌதம் கம்பீர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியா எனது அடையாளம். எனது நாட்டுக்காக சேவையாற்றுவது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். இந்திய அணியின் தொப்பியை புதிய பொறுப்பில் மீண்டும் அணிந்துகொள்ள உள்ளதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை தேடித் தரவேண்டும் என்பதுதான் எப்போதும் என்னுடைய நோக்கம். 140 கோடி மக்களின் கனவுகளை இந்திய அணி தனது தோளில் சுமந்து செல்கிறது. எனது அதிகாரத்துக்கு உட்பட்டு 140 கோடி மக்களின் கனவை நனவாக்க என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.