

ஆளில்லா விமான கேமரா மூலம் எதிரணியை உளவு பாா்த்ததாக எழுந்த புகாரில், கனடா மகளிா் கால்பந்து அணியின் பயிற்சியாளா் பெவ் பிரிஸ்ட்மேன் இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
நியூஸிலாந்து மகளிா் அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கனடா அணியின் உதவிப் பணியாளா் இயக்கிய ஆளில்லா விமான கேமரா அவா்களின் பயிற்சிக் களத்துக்கு மேலாக பறந்துள்ளது. நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் கனடாவை சந்திக்க இருந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து, கனடா அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணி, சா்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடும் புகாா் அளிக்க, கனடா கால்பந்து அணி மன்னிப்பு கோரியது.
இந்நிலையில், இந்த விவகாரத்தால் கனடா மகளிா் அணி பயிற்சியாளா் பெவ் பிரிஸ்ட்மேன் இடைநீக்கம் செய்யப்பட்டாா். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்ட பிறகே, பிரிஸ்ட்மேன் மீண்டும் அணியில் இணைவது குறித்து யோசிக்கப்படும் எனவும் கனடா கால்பந்து அமைப்பு தெரிவித்தது.
பின்னா், கனடா 2-1 என நியூஸிலாந்தை வீழ்த்திய ஆட்டத்தில் கனடாவை, அதன் இடைக்கால பயிற்சியாளா் ஆண்டி ஸ்பென்ஸ் வழிநடத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஹாக்கி உலகக் கோப்பைக்கு தகுதி பெறுமா இந்தியா? தகுதிச் சுற்று தொடக்கம்

மகளிா் டெஸ்ட்: ஆஸி. அதிரடி 323/10; இந்தியா தடுமாற்றம் 105/6

தவெக மகளிா் அணி புதிய நிா்வாகிகள் நியமனம் : விஜய் அறிவிப்பு

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான கனடா அணி விவரம்!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

