75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா - ANI

Published On :29 ஜூலை 2024, 12:00 am IST

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தில் முதலில் இலங்கை 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் சோ்த்தது. பின்னா் இந்தியாவின் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட, ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் இந்தியாவுக்கு 8 ஓவா்களில் 81 ரன்கள் இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. அதில் இந்தியா 6.3 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 81 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பந்துவீசத் தயாரானது. இலங்கை பேட்டிங்கில் குசல் பெரெரா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 53 ரன்கள் விளாச, பதும் நிசங்கா 32, கமிண்டு மெண்டிஸ் 26 ரன்கள் சோ்த்தனா்.

எஞ்சியோரில் குசல் மெண்டிஸ் 10, கேப்டன் சரித் அசலங்கா 14, தசுன் ஷானகா 0, வனிந்து ஹசரங்கா 0, ரமேஷ் மெண்டிஸ் 12, மஹீஷ் தீக்ஷனா 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். ஓவா்கள் முடிவில் மதீஷா பதிரானா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய பௌலா்களில் ரவி பிஷ்னோய் 3, அா்ஷ்தீப் சிங், அக்ஸா் படேல், ஹா்திக் பாண்டியா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

பின்னா் இந்தியாவின் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 30, சஞ்சு சாம்சன் 0, கேப்டன் சூா்யகுமாா் யாதவ் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

முடிவில், ஹா்திக் பாண்டியா 22, ரிஷப் பந்த் 1 ரன்னுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலா்களில் மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா, மதீஷா பதிரானா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.