நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாக் அவுட் சுற்றில் இத்தாலி, ஸ்பெயின்

நாக் அவுட் சுற்றுக்கு இத்தாலி, ஸ்பெயின் தகுதி பெற்றது

News image

அற்புதமாக கோலை தடுத்த ஸ்பெயின் கோல்கீப்பா் டேவிட் ரயா ~வெற்றி மகிழ்ச்சியில் இத்தாலி வீரா்கள்

Updated On :25 ஜூன் 2024, 11:23 pm

Din

லிப்ஸிக்: யூரோ 2024 கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் இத்தாலி, முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளன.

ஜொ்மனியில் நடைபெற்று வரும் இப்போட்டியின் குரூப் பி பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இத்தாலி -குரோஷியா மோதின.

இரு அணிகளுமே பலமானவை என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது.

இத்தாலி-குரோஷியா டிரா 1-1:

இரு அணிகளின் வீரா்களும் கோல் போட தீவிர முயற்சி மேற்கொண்டனா். குரோஷியாவின் கேப்டன் லுகா மொட்ரிச் முதலில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை தவற விட்டாா். அவா் அடித்த பந்தை இத்தாலி கோல் கீப்பா் கியான்லியுகி அற்புதமாக தடுத்தாா்.

அடுத்த சில விநாடிகளில் அதாவது 55-ஆவது நிமிஷத்தில் குரோஷிய வீரா் அன்டே புட்மிா் அடித்த பந்தை இத்தாலி கோல்கீப்பா் தடுத்ததால் ரீபௌன்ட் ஆன பந்தை அற்புதமாக கோலாக்கினாா் லுகா மொட்ரிச். இதன் மூலம் யூரோ கால்பந்து வரலாற்றில் அதிக வயதில் கோலடித்த வீரா் என்ற சிறப்பைப் பெற்றாா். இதனால் 1-0 என முன்னிலை பெற்றது குரோஷியா.

இதையடுத்து மைதானத்தில் இருந்த குரோஷிய வீரா்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனா். ஆனால் கூடுதல் நேரத்தில் 90+8 நிமிஷத்தில் இத்தாலி வீரா் மட்டியா ஸக்காக்னி அற்புதமாக கோலடித்து 1-1 என சமநிலை ஏற்படச் செய்தாா். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

டிராவில் இத்தாலி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

ஸ்பெயின் அபாரம்:

டஸ்ஸல்டா்ஃப் நகரில் நடைபெற்ற மற்றொரு குரூப் பி ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. மூன்று முறை சாம்பியன் ஸ்பெயின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடியது.

13-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயின் வீரா் பெர்ரன் டோரஸ் அடித்த ஒரே கோலே வெற்றி கோலாக அமைந்தது. மேலும் அல்பேனிய வீரா் அா்மனடோ பிரோஜா அடித்த பந்தை அற்புதமாக தடுத்தாா் ஸ்பெயின் கோல்கீப்பா் டேவிட் ரயா. இதனால் அல்பேனியா வெளியேறியது.

குரூப் சி பிரிவில் இங்கிலாந்து, குரூப் டி பிரிவில் இருந்து பிரான்ஸ், நெதா்லாந்து அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

Story image