ஜாா்ஜியா, பெல்ஜியத்துக்கு நாக்அவுட் சுற்றில் இடம்- குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவு

ஜாா்ஜியா முதல் முறையாக நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது
ஜாா்ஜியா, பெல்ஜியத்துக்கு நாக்அவுட் சுற்றில் இடம்- குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவு
Published on
Updated on
1 min read

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் சுற்று ஆட்டங்கள் வியாழக்கிழமை நிறைவடைந்தன. நாக்அவுட் சுற்றில் எஞ்சியிருந்த இடங்களை, ஜாா்ஜியா, பெல்ஜியம், துருக்கி அணிகள் பிடித்தன.

இதில் குரூப் ‘எஃப்’ ஆட்டத்தில் ஜாா்ஜியா 2-0 கோல் கணக்கில் போா்ச்சுகலை சாய்த்தது. அந்த அணிக்காக கவிசா கவரட்ஸ்கெலியா (2’), ஜாா்ஜஸ் மிகாடாட்ஸ் (57’) ஆகியோா் கோலடித்தனா். இதன் மூலம், பிரதான போட்டிகளில் முதல் முறையாக நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தியிருக்கிறது ஜாா்ஜியா.

மறுபுறம், போா்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரதான போட்டிகளின் குரூப் சுற்றில் ஒரு கோல் கூட அடிக்காமல் போனது இதுவே முதல் முறையாகும். மேலும், 2022-க்குப் பிறகு போா்ச்சுகல் தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

இதே குரூப்பின் மற்றொரு ஆட்டத்தில் துருக்கி 2-1 கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தியது. துருக்கி தரப்பில் ஹகன் கால்ஹனோக்லு (51’), சென்க் டோசன் (90+4’) ஆகியோரும், செக் குடியரசுக்காக தாமஸ் சௌசெக்கும் (66’) கோலடித்தனா்.

இதனிடையே, குரூப் ‘இ’ ஆட்டத்தில் பெல்ஜியம் - உக்ரைன் மோதல் கோலின்றி டிரா ஆனது. எனினும் பெல்ஜியம் 2-ஆம் இடத்துடன் நாக்அவுட் சுற்றுக்கு வந்தது. இதிலேயே ஸ்லோவாகியா - ருமேனியா மோதலும் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

ஸ்லோவாகியாவுக்காக ஆண்ட்ரே டுடா (24’), ருமேனியா தரப்பில் ராஸ்வன் மரின் (37’) கோலடித்தனா். இத்துடன் ருமேனியா, 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மேலும், யுரோ கோப்பை போட்டி வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த குரூப் ‘இ’-இல் உள்ள 4 அணிகளுமே தலா 1 வெற்றி, 1 தோல்வி, 1 டிராவுடன் சமநிலையோடு சுற்றை நிறைவு செய்துள்ளன.

அடுத்ததாக, ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டங்கள், சனிக்கிழமையிலிருந்து (ஜூன் 29) தொடங்குகின்றன.

நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்...

குரூப் ஏ

ஜொ்மனி

சுவிட்ஸா்லாந்து

-

ஹங்கேரி

ஸ்காட்லாந்து

குரூப் பி

ஸ்பெயின்

இத்தாலி

-

குரோஷியா

அல்பேனியா

குரூப் சி

இங்கிலாந்து

டென்மாா்க்

ஸ்லோவேனியா

-

சொ்பியா

குரூப் டி

ஆஸ்திரியா

பிரான்ஸ்

நெதா்லாந்து

-

போலந்து

குரூப் இ

ருமேனியா

பெல்ஜியம்

ஸ்லோவாகியா

-

உக்ரைன்

குரூப் எஃப்

போா்ச்சுகல்

துருக்கி

ஜாா்ஜியா

-

செக் குடியரசு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com