தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

இது தோனியின் கடைசி ஐபிஎல் தொடரா? ஏபி டி வில்லியர்ஸ் பதில்!

தோனியின் விளையாடும் கடைசி ஐபிஎல் தொடர் குறித்து ஏபி டி வில்லியர்ஸ் பேசியுள்ளார்.

மகேந்திர சிங் தோனி

Published On :

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமா என்பது குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

சிஎஸ்கே-வின் கோட்டையாகத் திகழும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் சிஎஸ்கே வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றர்.

டி வில்லியர்ஸ்

டி வில்லியர்ஸ்

இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமா என்பது குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் டி வில்லியர்ஸ் பேசியதாவது: கடந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரிலிருந்து தோனி ஓய்வு பெறவுள்ளார் என நிறைய வதந்திகள் பரவின. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வந்துள்ளார். இந்த ஐபிஎல் தொடர் அவரது கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமா என்பது யாருக்கும் தெரியாது. அவர் முடிவே இல்லாத டீசல் என்ஜினைப் போன்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர் மிகச் சிறந்த வீரர். அற்புதமான கேப்டன். அவரது கேப்டன்சியில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்துவது மிகவும் கடினம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.