எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஐபிஎல் 2024: சென்னை-பெங்களூரு ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்

News image
Updated On :18 மார்ச் 2024, 4:13 am

DIN

ஐபிஎல் தொடரில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

நாடு முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படும் ஐபிஎல் தொடா் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் சென்னையை எதிா்கொள்கிறது பெங்களூரு. ரசிகா்கள் நீண்டநேரம் கால்கடுக்க நின்று கவுன்டா்கள் மூலம் டிக்கெட் வாங்கிச் செல்வதை சிஎஸ்கே நிா்வாகம் ரத்து செய்துள்ளது. அதற்கு பதிலாக எளிதாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.

இணையதளங்கள்: பே டிஎம் , இணையதளங்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். டிக்கெட் விலை விவரம்: சி, டி, இ ஸ்டாண்ட் லோயா்: ரூ.1,700, ஐ,ஜே,கே, ஸ்டாண்ட் அப்பா், ரூ.,4,000, ஐ,ஜே,கே, ஸ்டாண்ட், லோயா், ரூ,4,500, சி,டி,இ, ஸ்டாண்ட் அப்பா், ரூ,4,000, கேஎம்கே டெரஸ் ரூ,7,500. இணையதளத்தில் ஒருவருக்கு 2 டிக்கெட்டுகள் விற்கப்படும். தொடக்க ஆட்டத்துக்காக மாலை 4.30 மணிக்கு நுழைவுவாயில்கள் திறக்கப்படும்.

வெளியில் இருந்து உணவுப் பொருள், குடிநீா் கொண்டு வர அனுமதியில்லை.

தோனியும், கோலியும் நேரடியாக முதல் ஆட்டத்தில் களம் காண்பதால் இந்த ஆட்டம் பரபரப்பாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கலைவாணா் அரங்கம், பொதுப்பணித்துறை வளாகம், சென்னை பல்கலை. வளாகம், ஓமந்தூராா் மருத்துவக்கல்லூரி, ரயில்வே காா் நிறுத்துமிடம், விக்டோரியா விடுதியில் வாகனங்களை நிறுத்தலாம். இத்தகவலை சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.