பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெற்றி பெறுவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

News image
ஸ்ரேயாஸ் ஐயர் - படம் | ஐபிஎல்
Updated On :6 மே 2024, 2:18 pm

DIN

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெற்றி பெறுவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌவை வீழ்த்தியது. இதன்மூலம், புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த 11 போட்டிகளில் 8 போட்டிகளில் கொல்கத்தாவுக்கு சாதகமாக டாஸ் அமையவில்லை. இருப்பினும், அந்த அணி விளையாடிய 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில், டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெற்றி பெறுவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: கடந்த 6 போட்டிகளாக கொல்கத்தா அணி வீரர்கள் உடைமாற்றும் அறைக்கு வந்து, என்ன கேப்டன் நாம் தொடர்ந்து டாஸ் தோற்றுக்கொண்டே இருக்கிறோம். ஆனால், போட்டிகளில் வெற்றி பெறுகிறோம். என்ன நடந்து கொண்டிருக்கிறது எனக் கேட்கிறார்கள். பவர் பிளேவில் எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கிறது. எங்களது தொடக்க ஆட்டக்காரர்கள் எதிரணிக்கு சவாலளிக்கும் விதமாக விளையாடுகிறார்கள். அணியில் வீரர்களுக்கு இருக்கும் சுதந்திரமே அவர்களை சிறப்பாக விளையாடச் செய்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.