100ஆவது ஆண்டில் ஹாக்கி இந்தியா!

ஹாக்கி இந்தியாவின் 100ஆவது ஆண்டினை முன்னிட்டு ஆடவருக்கான ஹாக்கி லீக் மீண்டும் தொடங்கப்படுகிறது...
100ஆவது ஆண்டில் ஹாக்கி இந்தியா
100ஆவது ஆண்டில் ஹாக்கி இந்தியாபடம்: எக்ஸ் / ஹாக்கி இந்தியா
Published on
Updated on
1 min read

ஹாக்கி இந்தியாவின் 100ஆவது ஆண்டினை முன்னிட்டு சிறப்புப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஹாக்கி விளையாட்டுக்கான தேசிய கூட்டமைப்பு நவ.7, 1925ஆம் ஆண்டு ஹாக்கி இந்தியா என்ற பெயரில் அமைக்கப்பட்டது. இந்த முக்கியமான நிகழ்வின்மூலம் ஹாக்கி இந்தியாவின் வெற்றிக்கும் புகழுக்கும் வித்திடப்பட்டது.

ஹாக்கி இந்தியாவின் சாதனைகள்

இந்திய விளையாட்டுத் துறையில் கடந்த 99 வருடங்களில் ஈடுஇணையற்ற சாதனைகளை ஹாக்கி இந்தியா படைத்துள்ளது. இதுவரை ஒலிம்பிக்கில் 8 தங்கம், 8 வெள்ளிப் பதக்கங்களும், 4 வெண்கலப் பதக்கங்களும் வென்றுள்ளன.

இயற்கையான ஆடுகளத்தில் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆடுகளத்தில்வரை ஹாக்கி இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ஹாக்கி இந்தியா புத்துயிர்ப்பு அடைந்துள்ளது. ஹாக்கியில் ஆடவர் அணி கடந்த 52 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஹாக்கி இந்தியா டோக்கியோ ஒலிம்பிக்கில் 4ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஹாக்கி லீக்

ஹாக்கி இந்தியா லீக் மீண்டும் நடைபெறவிருக்கிறது. 2013இல் தொடக்கிய இந்த லீக் 2017 உடன் நடைபெறாமல் இருந்தது. தற்போது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இது மீண்டும் தொடங்கவிருப்பது மகிழ்ச்சியான செய்தி.

பல சர்வதேச போட்டிகளை ஹாக்கி இந்தியா சிறப்பாக நடத்தியிருக்கிறது. உலக தரமான ஆடுகளத்தை இந்தியா முழுவதும் நிறுவியிருக்கிறது.

டிஜிட்டல் புதுமை

ஆன்லைனில் வீரர்கள் குறித்த பதிவு முறை, தேசிய வீரர்கள் குறித்த தரவுகள், மெம்பர் யுனிட் போர்டல் என டிஜிட்டல் புதுமையை புகுத்தியுள்ளது.

சமத்துவம்

ஹாக்கி இந்தியா பாலின சமத்துவத்தை விரும்புகிறது. ஆடவருக்கு என்ன பரிசுத்தொகையோ அதேயளவு பெண்களுக்கும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாக்கி இந்தியாவின் தலைவர் திலீப் டர்கி கூறியதாவது:

100ஆவது ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு ஹாக்கி இந்தியா ஆடவருக்கான ஹாக்கி லீக்கினையும் மீண்டும் துவங்குகிறது. மேலும் பெண்களுக்கான ஹாக்கி லீக்கினையும் தொடங்குகிறது.

இவ்வளவு நீண்ட மறக்கமுடியாத பயணத்தையும் தொடர்ச்சியான போராட்டங்கள் வழியாக உருவான லெகசியை (விருப்புரிமைக்கொடை) வெளிக்காட்டும் விதமாகவும் இந்த வெற்றிக் கொண்டாடப்படுகிறது என்றார்.

இந்தியாவின் பெருமிதம்

ஹாக்கி இந்தியாவின் செயலர் போலா நாத் சிங், “ ஹாக்கி இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நூற்றாண்டு கால கொண்டாட்டம் நமது கலாச்சாரத்தினையும் வருங்காலத்தின் நோக்கத்தினையும் பிரதிபலிக்கிறது. ஹாக்கி லீக் மீண்டும் தொடங்கப்படுவதும் மகளிருக்கு புதியதாக தொடங்குவதும் விளையாட்டில் திறமைகளை வளர்க்கவும் சமநிலையை உருவாக்கவும் முக்கிய பங்கு வகிக்கும். ஹாக்கியின் வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாக எதிர்நோக்குகிறோம். கடந்த காலத்தை மதித்து இந்தியாவின் வருங்காலத்துக்கான பிரகாசமான அணியை உருவாக்குவதே எங்களின் நோக்கம்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com