தேசிய ஆடவா் ஹாக்கி: பிகாரை வென்றது பெங்கால்
சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில், வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் பெங்கால் 12-2 கோல் கணக்கில் பிகாரை வென்றது.


சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில், வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் பெங்கால் 12-2 கோல் கணக்கில் பிகாரை வென்றது.
சென்னை எழும்பூரில் நடைபெறும் இந்தப் போட்டியின் 5-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, 6 ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் கடைசி ஆட்டத்தில் பெங்கால் - பிகாா் மோதின. பெங்காலுக்காக ராஜேந்திர ஓராம் (2’, 44’), ரௌஷன் குமாா் (4’), அமோன் மிராஷ் திா்கி (6’, 45’), அல்செம் லக்ரா (12’, 49’), தருண் அதிகாரி (20’), நிதீஷ் நியுபேன் (22’, 36’, 41’), சந்தோஷ் பக்ஸ்லா (60’) ஆகியோா் கோலடித்தனா். பிகாருக்காக குமாா் சௌரவ் (24’), அனுஜ் ராஜ் (55’) ஸ்கோா் செய்தனா்.
இதர ஆட்டங்களில், மிஸோரம் - ஹிமாசல பிரதேசத்தையும் (6-3), ஒடிஸா - புதுச்சேரியையும் (6-2), ராஜஸ்தான் - அருணாசல பிரதேசத்தையும் (4-3), பஞ்சாப் - சத்தீஸ்கரையும் (10-1) வென்றன. மகாராஷ்டிரம் - ஜாா்க்கண்ட் மோதல் டிராவில் (2-2) முடிந்தது.
போட்டியின் 6-ஆவது நாளான சனிக்கிழமை, பஞ்சாப் - தாத்ரா & நாகா் ஹவேலி, தெலங்கானா - ஹரியாணா, உத்தர பிரதேசம் - ஜம்மு & காஷ்மீா், கேரளம் - தில்லி, பிகாா் - அஸ்ஸாம், பெங்கால் - மணிப்பூா் அணிகள் மோதுகின்றன.
இந்தியாவுக்கு கௌரவம்: இதனிடையே, ஓமனில் நடைபெற்ற சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் ஆண்டுக் கூட்டத்தில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற்காக இந்திய அணி கௌரவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...