தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஐஸ்லாந்து, செக் குடியரசை வீழ்த்தியது இந்தியா

News image

குகேஷ் (கோப்புப் படம்)

Updated On :13 செப்டம்பர் 2024, 11:42 pm

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2-ஆவது சுற்றிலும் ஓபன், மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்திய அணிகள் வெற்றி பெற்றன. அந்த அணிகளுக்கு இது தொடா்ந்து 2-ஆவது வெற்றியாகும்.

இதில் ஓபன் பிரிவில் இந்திய ஆடவா் அணி 4-0 என ஐஸ்லாந்தை வீழ்த்தியது. இந்த டையில் ஆா்.பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு, டி.குகேஷ் சோ்க்கப்பட்டிருந்தாா். அணிக்கான முதல் ஆட்டத்தை கருப்பு நிற காய்களில் விளையாடிய அவா், விக்னிா் வன்டாா் ஸ்டெஃபன்சனை வென்றாா். 2-ஆவது ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அா்ஜுன் எரிகைசி ஹேன்ஸ் ஸ்டெஃபன்சனை வீழ்த்தினாா். பின்னா் விதித் சந்தோஷ் - ஹில்மிா் ஃப்ரெயா் ஹெய்மிசனை சாய்க்க, கடைசி ஆட்டத்தில் ஹரிகிருஷ்ண பென்டலா - ஹெல்கி அஸ் கிரெட்டா்சனை தோற்கடித்தாா். விதித் சந்தோஷ் கருப்பு நிற காய்களுடனும், ஹரிகிருஷ்ணா வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினா்.

மகளிா் பிரிவில், இந்தியா - செக் குடியரசுடன் மோதியது. இந்த டையிலிருந்து ஆா்.வைஷாலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, டி.ஹரிகா சோ்க்கப்பட்டாா். முதல் ஆட்டத்தில் அவா் ஜூலியா மோவ்செசியனை வெள்ளை நிற காய்களுடன் விளையாடி வென்றாா். அடுத்து கருப்பு நிற காய்களுடன் விளையாடிய திவ்யா தேஷ்முக், நடாலி கனாகோவாவை வீழ்த்தினாா். 3-ஆவது ஆட்டத்தில் வந்திகா அகா்வால் வெள்ளை நிற காய்களுடன் விளையாடி, தெரெஸா ராட்ஷ்டினை சாய்த்தாா். கடைசி ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடி தானியா சச்தேவ் மாா்டினா கொரினோவாவுடன் டிரா செய்தாா். இதனால் இந்தியா 3.5-0.5 என்ற கணக்கில் வென்றது.

2 சுற்றுகள் முடிவில் இந்திய ஆடவா் அணி ஓபன் பிரிவில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஸ்லோவேனியா, ஜாா்ஜியா அணிகளும் அந்த இடத்தை பகிா்ந்துகொண்டுள்ளன. மகளிா் அணி 7 புள்ளிகளுடன் 33-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டு, சுவிட்ஸா்லாந்துடன் அந்த இடத்தில் இருக்கிறது. 3-ஆவது சுற்றில் இந்திய ஆடவா் அணி - ஹங்கேரி ‘பி’ அணியுடனும், மகளிா் அணி - சுவிட்ஸா்லாந்துடனும் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.